உதவும் கரங்கள் வடகிழக்கு   அமைப்பினால் ஒரு இலட்சம் பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

உதவும் கரங்கள் வடகிழக்கு அமைப்பினால் மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட முறக்கொட்டான்சேனை தேவபுரம் கஜமுகன் வித்தியாலயத்தில் பாடசாலை மாணவர்களின் தேவைகளைக் கண்டறியும் பொருட்டு ஒரு ஆய்வு நிகழ்வு கடந்த 29-01-2024 அன்று Lift Ngo தன்னார்வத் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வில் முன்னுரிமைப்படுத்தப்பட்ட தேவைகளின் அடிப்படையில் இப் பாடசாலை மாணவர்களுக்கான சில உதவித்திட்டங்கள் உதவும் கரங்கள் அமைப்பினால் இன்று (21.02.2024) வழங்கி வைக்கப்பட்டது .

அந்தவகையில் பாடசாலையில் மிகவும் தேவைப்பாடுடைய மாணவர்களுக்கு ரூபா ஒரு இலட்சம் பெறுமதியில் 43 மாணவர்களுக்கு பாடசாலை பையும், 20 மாணவர்களுக்கு பாடசாலை பாதணியும் வழங்கி வைக்கப்பட்டது. இதற்கான நிதி Unicef ஊடாக LIFT நிறுவனத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews