பிறந்து 9 நாட்களே ஆன தன் குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க முயன்ற தாய் கைது

மினுவாங்கொடை பிரதேசத்தில் பிறந்து 9 நாட்களே ஆன குழந்தையை வேறு தரப்பினருக்கு சட்டவிரோதமான முறையில் விற்க முயன்ற பெண் ஒருவர் நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.

புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியக அதிகாரிகளினால் இந்த பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

28 வயதுடைய சந்தேக நபரான பெண் குழந்தையின் தாய் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன், அவர் குழந்தையை 360,000 ரூபாவுக்கு விற்க திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணை
மினுவாங்கொடை, பன்சில்கொட பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தற்போது மினுவாங்கொடை பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews