வடமராட்சி கிழக்கு பிரதேச இளைஞர் கழக புதிய நிர்வாக தெரிவு

யாழ்.வடமராட்சிக் கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன நிர்வாக தெரிவானது இன்றைய தினம் (17) வடமராட்சிக் கிழக்கு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன் தலைவராக திரு க.சயந்தன் அவர்களும் செயலாளராக பதவி வழியாக இளைஞர் சேவை உத்தியோகத்தர் திரு உ.நிதர்சன் அவர்களும் பொருளாளராக திரு பூ.லின்ரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்தோடு சம்மேளனத்தின் ஏனைய பதவிகளுக்கும் பிரதேச இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டதுடன் குறித்த நிகழ்வில் பிரதேசத்தின் பல இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews