அரசியல்வாதிகளுக்கு கொண்டுவரப்பட்ட தடை

அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்களின் பெயர்களை பாடசாலைகளில் இருந்து நீக்குமாறு அனைத்து மாகாண ஆளுநர்களுக்கும் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை அனைத்து ஆளுநர்களும் கூடி இந்த முடிவை அறிவிப்பார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இனிமேல் உயிருடன் இருக்கும் யாருடைய பெயரையும் பாடசாலைகளில் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்துவதாகவும் அவர் கூறினார்.

பாடசாலை பழைய மாணவர் சங்கங்களின் வேண்டுகோளுக்கு இணங்க, கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் உயிருடன் இருக்கும் போதே பாடசாலைகளுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

 

Recommended For You

About the Author: Editor Elukainews