வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டுப் பேரவை, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் இணைந்த ஏற்பாட்டில், வடமாகாணத்தின் யாழ்ப்பாண மாவட்ட பண்பாட்டு விழா இன்று யாழ்ப்பாணம் நாச்சிமார் ஆலயத்திறகு அருகாமையில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க ம.பிரதீபன் தலைமையில் நடைபெற்றது.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலில் இருந்து ஊர்வலமாக யாழ்ப்பாண குழல் ஓசை, சிறுவர் நடனம், கும்பியாட்டம், கோலாட்டம், காவடியாட்டம், இஸ்ஸாமிய நடனம், பொய்கால் குதிரையாட்டம்,மயிலாட்டம் என்னும் கிராமிய நடனத்துடன் விருந்தினர்கள் சரஸ்வதி மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இவ் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச்.எம்.சாள்ஸ் கலந்துகொண்டார்.
இவ் விழாவில், கலை பண்பாட்டில் மிகச்சிறந்த ஆற்றலை 07 வருடகாலமாக வெளிப்படுத்திய 15 பேருக்கு யாழ் முத்து விருதும், கடந்த இரண்டு வருடங்களாக கலைத்துறைக்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றி வந்த இளம் கலைஞர்கள் விருது 12 நபர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
இவ் விருதுகளை வடமாகாண ஆளுநர் திருமதி பி.எச். எம்.சாள்ஸ் வழங்கி வைத்தார்.
வடமாகாண கலை பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்பணிப்பாளர் லாகினி நிர்பராஜ், சிவபூமி அறக்கட்டளை ஸ்தாபகராம் தெல்லிப்பளை துர்க்கா தேவி தேவஸ்தான தலைவருமான ஆறுதிருமுருகன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், கலாச்சார உத்தியோகத்தர்கள், இளங்கலைஞர் கள், யாழ் முத்து விருது பெறும் கலைஞர்கள், சமூக பெரியோர்கள், ஆய்வாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.