முல்லைத்தீவில் சுகாதார சிற்றூழியர்கள் மற்றும் தாதியர்கள் பணிபுறக்கணிப்பில்!

முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை தாதியர்கள் மற்றும் முல்லைத்தீவு பிரதேச வைத்தியாசலை சிற்றூழியர்கள் பணிபுறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்று 27.09.21 காலை 7.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை இந்த பணிபுறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.

நாடளாவியரீதியில் தாதியர் சங்கத்தினர் புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.
44 தொழில் சங்கங்களும் இணைந்து இந்த தொழில் சங்க புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பினை மேற்கொண்டுள்ளார்கள்.

கொரோனா காலத்தில் தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தல் இந்த காலத்தில் மேலதிக நேர விசேட தின கொடுப்பனவினை கட்டுப்பாடு இன்றி வழங்குதல் சுகாதா ஊழியர்களின் வெற்றிடங்களை நிரப்புதல் போன்ற கோரிக்கையினை முன்வைத்து பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளார்கள்.

இன்று திங்கட்கிழமை மாவட்ட மருத்துவமனை உள்ளிட்ட மருத்துவமனைகளுக்கு சென்ற நோயாளர்கள் பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளர்கள் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னரே சிகிச்சை நடைபெறும் என அறிவித்துள்ளதாக நோயாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.
குறிப்பாக கர்பவதி பெண்கள் நீண்ட தூரங்களில் இருந்து மாவட்ட மருத்துவமனைக்கு சென்றபோதும் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொள்ளமுடியாத நிலை காணப்படுவதாக கவலை தெரிவித்துள்ளார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews