கணவனின் துப்பாக்கிச்சூட்டில் மனைவி மரணம்…

எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கரதமண்டிய பிரதேசத்தில், நபரொருவர் தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ளார்.

இந்த சம்பவத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே பெண்ணே மரணமடைந்தார்.

துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான பெண்ணை, எம்பிலிப்;பிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்தப்போதிலும் குறித்த நபர் சிகிச்சை பலன்னின்றி மரணமடைந்துள்ளார்.

குடும்பச் சண்டையே இந்த கொலை சம்பவத்துக்குக் காரணம் என்று தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சந்தேக நபரை இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews