பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில் பலர் கைது…./

நாடளாவிய ரீதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நேற்று (26) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்புகளில், பல்வேறு குற்றங்களுடன் தொடர்புடைய பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று, பொலிஸ் தலைமையகம் இன்று (26) விடுத்துள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கமைவாக மதுபான சுற்றிவளைப்பொன்றில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 15 லீற்றர் மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் ஒரு செப்புத் தகடு மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை பூகொட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பெபிலியவல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 5 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தங்கல்ல பெபிலியாவல பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாக இந்நாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட 209 புகைத்தர் பொருட்களுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.துங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 61ஆம் மைல்கல் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 120 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

முருங்கன்பிட்டி, முருங்கன் பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பாட்டுள்ளார்.

களனிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 கிராம் ஹெரோய்னுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

களனிய பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயது நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குளியாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் அத்துமீறி நுழைந்த இருவர், வீட்டிலிருந்தவர்களை துப்பாக்கிமுனையில் அச்சுறுத்தி கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்றுள்ள நிலையில், வீட்டிலிருந்தவர்கள் குறித்த இருவரையும் மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துடள்ளனர்.

தியதொர பிரதேசத்தைச் சேர்ந்த 30, 43 வயதுடைய இருவரே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து வெளிநாட்டுத் துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews