ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதியை தீர்த்துக் கட்டிய இஸ்ரேல்

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தளபதி பலியாகியுள்ளதாக லெபனான் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல், கடந்த வாரம் பெய்ரூட்டில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் துணை தலைவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்குப் பின் ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதலைத் தீவிரப்படுத்தியது.

இந்த நிலையில் ஹிஸ்புல்லா தளபதி பயணித்த கார் மீது இஸ்ரேல் போர் விமானம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

இது குறித்து ஹிஸ்புல்லா தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை தெற்கு லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவின் கட்டுமானங்கள் தாக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews