கண்ணீருடன் விடைபெற்றார் வார்னர்

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திரம் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்த நிலையிலேயே அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார்.

போட்டியின் நான்காம் நாளான நேற்று டேவிட் வார்னர் 57 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில், சஜீட் கான் வீசிய பந்தில் ஆட்டமிழந்துள்ளார்.

வார்னர் தனது இறுதி சர்வதேச போட்டியில் ஆட்டமிழந்து வெளியேறும் போது, வீரர்கள் உட்பட பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு கௌரவமளித்துள்ளனர்.

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 2011ஆம் ஆண்டு அறிமுகமான டேவிட் வார்னர், 112 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 26 சதங்கள், 37 அரைச் சதங்களுடன் 8786 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews