ஐந்தடி வான் வாய்க்காலுக்குள் பாய்ந்தது முச்சரக்கரவண்டி! சாரதி தப்பி ஓட்டம்!

கிளிநொச்சி ஐந்தடி வான் பகுதியில் முக்சக்கரவண்டி ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று நண்பகல் இடம்பெற்றுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து ஐந்தடி வான் பாலத்தில் பயணித்துக்கொண்டிருந்தவர்கள் மீது மோதி அதன் தொடராக இரணைமடுவிலிருந்து நீர் வெளியேறிப் பாயும் வாய்க்காலுக்குள் பாய்ந்துள்ளது.
சம்பவத்தில் எவருக்கும் பாரிய ஆபத்துக்கள் ஏற்படவில்லை என்று தெரியவருகிறது.
விபத்தினால் முச்சக்கரவண்டி நீரில் மூழ்கிய நிலையில் அதனை செலுத்திவந்த சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews