மின்னல் தாக்கி மரணித்த குடும்பஸ்தருக்குக் கொரோனா!

யாழ்., வடமராட்சி கிழக்கு, வெற்றிலைக்கேணியில் மின்னல் தாக்கி உயிரிழந்த நபருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் நேற்றுமுன்தினம் கடற்றொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மற்றுமொருவர் மயக்கமுற்ற நிலையில் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும், மின்னல் தாக்கி உயிரிழந்தவர் 35 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையாவார்.

Recommended For You

About the Author: Editor Elukainews