அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியுள்ளார்.

உலக வரைபடத்தில் நாற்கர (குவாட்) வடிவில் அமைந்திருக்கும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் குவாட் குழுவை உருவாக்கி உள்ளன.

இந்த குவாட் கூட்டமைப்பின் உச்சி மாநாடு, அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் விடுத்த அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, வாஷிங்டனில் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா உள்ளிட்டோரை சந்தித்தார்.

இதனை தொடர்ந்து நேற்றிரவு, முதல்முறையாக பிரதமர் மோடி, அமெரிக்க ஜனாதிபதியான ஜோ பைடனை சந்தித்து பேசியுள்ளார்.

இதுவரை தொலைபேசி வாயிலாகவும், காணொலி வாயிலாகவும் இருவரும் உரையாடியுள்ள நிலையில், முதல் முறையாக நேரில் சந்தித்து உரையாடினர்.

சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், இரு நாடுகளுக்கு இடையேயான வணிகம், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், சர்வதேச பிரச்னைகள், ஆப்கானிஸ்தான் விவகாரம், பயங்கரவாதம் உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர்.

முன்னதாக வெள்ளை மாளிகை வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாரத நாட்டியம் உள்ளிட்ட பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews