டி20,ஒரு நாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

சிம்பாப்வே அணியானது இலங்கை அணியுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் பங்கேற்பதற்காக வருகின்ற ஜனவரி மாதம் இலங்கை வரவுள்ளது.

இந்த போட்டிகளுக்கான இலங்கை குழாமில், ஏஞ்சலோ மெத்யூஸ், பானுக ராஜபக்ச மற்றும் பினுரா பெர்னாண்டோ ஆகியோர் டி20 தொடருக்கான குழாமில் இணைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் டி20 அணியை வனிந்து ஹஸரங்க வழிநடத்தவுள்ளதோடு சரித் அசலங்க உபதலைவராக செயற்பட உள்ளார்.

அதேவேளை, ஒரு நாள் போட்டிகளுக்கான அணியின் தலைவராக குசல் மெண்டிஸ் செயற்படவுள்ளார்.

விளையாட்டு துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவால் இந்த 22 பேர் கொண்ட இலங்கை குழாமானது உறுதிப்படுத்தப்பட்டு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது.

T20 தொடருக்கான இலங்கை குழாம் : வனிந்து ஹசரங்க (தலைவர்), சரித் அசலங்க (உப தலைவர்), பெத்தும் நிஸங்க, குசல் மென்டிஸ், சதீர சமரவிக்ரம, தசுன் ஷானக, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஷ் தீக்சன, நுவன் துஷார, குசல் ஜனித் பெரேரா, பானுக ராஜபக்ச, கமிந்து மெண்டிஸ், மதீஷ பத்திரன, துனித் வெல்லாலகே, அகில தனஞ்சய, ஜெஃப்ரி வெண்டர்சே, சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ, பிரமோத் மதுஷான், தில்ஷான் மதுஷங்க, மற்றும் துஷ்மந்த சமீர.

ஒரு நாள் தொடருக்கான இலங்கை குழாம் : குசல் மெண்டிஸ் (தலைவர்), சரித் அசலங்கா (உப தலைவர்), பெத்தும் நிஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சஹான் ஆராச்சிகே, நுவனிது பெர்னாண்டோ, தசுன் ஷானக, கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரத்ன, ஜனித் லியனகே, வனிந்து ஹசரங்க, மஹீஷ் தீக்சன, தில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷன், அசித்த பெர்னாண்டோ, அகில தனஞ்சய, ஜெஃப்ரி வாண்டர்சே மற்றும் சாமிக்க குணசேகர ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews