மன்னாரில் திலிபனின் நினைவு நிகழ்வுக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு.

மன்னாரில் எதிர் வரும் 26ஆம் திகதி தியாகி தீலிபனின் நினைவேந்தல் நிகழ்வு  மேற்கொள்ளவிருப்பதாக கூறி மன்னார் பொலிசார் தடை உத்தரவை பிறப்பிக்க கோரி மன்னார் நீதிமன்றத்தில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை வழக்குத் தாக்கல் செய்தனர்.

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் என்பவரே குறித்த நினைவேந்தலை மேற்கொள்ள உள்ளதாக கூறி வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் சிவகரன் என்பவரை இன்றைய தினம் மதியம் 1.30 மணி அளவில் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பானை விடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜரானார்.

சிவகரன் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.சிராய்வா மற்றும் சட்டத்தரணி அன்ரனி றொமோசன் ஆகியோர் மன்றில் முன்னிலையாகி இருந்தனர்.

மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள் தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

மன்னர் பொலிசார் தாக்கல் செய்தது போல் மக்களை ஒன்று சேர்த்து நினைவேந்தலை நடாத்த எவ்வித ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், பொலிசார் கற்பனையில் பொய்யான வழக்கை மன்றில் தாக்கல் செய்துள்ளனர் என சமர்ப்பணத்தை முன் வைத்ததோடு, புலனாய்வுத் துறையினரின் தகவலுக்கு அமைவாக என்ன சான்றுடன் குறித்த வழக்கை பொலிசார் மன்றில் தாக்கல் செய்துள்ளனர் எனவும் ,
போலிசார் மன்றில் தெரிவித்தது போல் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி மக்களை ஒன்று கூட்ட முயற்சிகளும் இடம்பெறவில்லை எனவும்,எனவே பொலிசாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்தரணிகள் மன்றில் தெரிவித்திருந்தனர்

இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

சிவகரன் என்பவர் எதிர் வரும் 26ஆம் திகதி நித்திலம் பதிப்பகத்தில் மக்களை ஒன்று கூட்டி எவ்வித ஒன்று கூடலையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.

பொலிசாரின் வேண்டுகையை ஏற்க மறுத்த நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியதுடன் எதிர் வரும் 01/10/2021 வழக்கை ஒத்தி வைத்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews