ஊழியர் சேமலாப நிதி: அரசு விடுத்த செய்தி!

ஊழியர் சேமலாப நிதியில் அரசாங்கம் தலையிடுவதை 77 சதவீத மக்கள் விரும்பவில்லை என்று வெளியிடப்பட்ட வெரிட்டே ரிசர்ச் நிறுவனத்தின் அறிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுக் கடன் மேம்படுத்தலின் கீழ் ஊழியர்களின் எதிர்கால வைப்பு நிதியில் தலையீடு செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை இந்தநாட்டில் உள்ள 77 சதவீத முதியோர் ஏற்கவில்லை என அந்த நிறுவனம் அண்மையில் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தது.
எனினும் அந்த நிறுவனம் ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட மாதிரி அளவு 1008 தனி நபர்களாவர்.
எனவே அது முழு இலங்கை மக்களினதும் நிலைப்பாடாக அமையாது என நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews