எந்த நாட்டிலிருந்தும் ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வரவேற்கப்படுகின்றன -ஜனாதிபதி

சீனா உட்பட எந்தவொரு நாட்டிலிருந்தும் எந்தவொரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலையும் இலங்கை வரவேற்கும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய நிறுவனமான FirstPost க்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.சீனாவின் யுவான் வாங் 5 மற்றும் ஷி யான் 6 ஆகிய கப்பல்கள் அண்மையில் மேற்கொண்ட துறைமுக அழைப்புகளுக்கு பதிலளித்த ரணில் விக்கிரமசிங்க,அந்தக் கப்பல்கள் உளவு கப்பல்கள் என கூறுவதற்கு ஆதாரம் இல்லை என தெரிவித்துள்ளார்.“உளவு கப்பல் என்றால் என்ன என்பது பெரிய கேள்விக்குறி. இவை சிவிலியன் கப்பல்கள், ஆனால் சிக்கல்கள் இருந்தால், உளவு கப்பல்கள் இருந்தால், அவற்றை உள்ளே வர அனுமதிக்கமாட்டோம். ஆனால் ஆய்வைப் பொருத்தவரை, நாங்கள் அனுமதிப்பது மட்டுமல்ல. சீன கப்பல்கள், ஆனால் ஏனைய கப்பல்களும் இலங்கைக்கு வருகின்றன என்பதை யாரும் வெளிச்சம் போட்டுக் காட்டவில்லை” என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.மேலும், “ஒவ்வொரு முறை சீன கப்பல் வரும்போதும் எங்களுக்கு அதிக விளம்பரம் கிடைக்கும். ஆனால், வேறு நாட்டிலிருந்து கப்பல், ஆய்வுக் கப்பல் வந்தால் புறக்கணிக்கப்படுகிறோம்” என்றார்.இலங்கை தனது சொந்த ஹைட்ரோகிராஃபிக் பிரிவை உருவாக்கப் போகிறது மற்றும் அதன் சொந்த கப்பல்களைப் பெறப் போகிறது என்றும், “அதன்பிறகு இந்தியா மற்றும் சீனாவைச் சுற்றி ஆய்வுகளை மேற்கொள்ளலாம்” என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews