மன்னார் மாவட்டத்திலும் கொரோணா தடுப்பு ஊசிகள் ஏற்றும் பணிகள் தீவிரம்…..!

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் சுகாதார வைத்திய அதிகாரிகள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவத்தின் உதவியுடன் இடம்பெற்று வருகின்றது.

இந்த நிலையில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளில் முதல் கட்டமாக மன்னார் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மன்னார் எருக்கலம்பிட்டி பெண்கள் பாடசாலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(21) சினோபாம் தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

குறித்த சினோபாம் தடுப்பூசியானது 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும்,30 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை எவ்வித தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாதவர்களுக்கும் குறித்த சினோபாம் கொவிட்-19 தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது 20 வயதிற்கு மேற்பட்ட பல நூற்றுக்கணக்கானவர்கள் சென்று சினோபாம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews