அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்…! கிளி மாவட்ட செயலர்.

இன்றைய அவசர நிலையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும் அவ்வாறில்லாது பொறுப்பற்ற விதத்தில் செயற்பட்டமை கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி பகுதியில் கடந்த வாரம் கொவிட்-19தொற்றினால் உயிரிழந்த ஒருவரின் சடலம் தகனம் செய்வதற்காக வைத்தியசாலையில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட சமயம் குறித்த சடலம் அவரது வீட்டுக்கு அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டமை தொடர்பில் மாவட்டத்தில் பல்வேறு தரப்பினரிடத்திலும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

இந்த விடயம் தொடர்பில் இன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது குறித்த கொவிட் -19 னால் உயிரிழந்தவரின் சடலம் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக என எழுப்பப்பட்ட கேள்விக்கு அவ்வாறான எந்த முறைப்பாடுகளும் இதுவரை கிடைக்கப்பெறவல்லை உண்மையில் கொவிட்-19 தொற்றுக்காரனமாக மரணித்தவரின் சடலத்தை கொண்டு செல்வது அல்லது கையாளுதல் தொடர்பாக சுகாதார நடைமுறைகளை பேணிக் கொள்வது வைத்தியசாலை மற்றும் சுகாதாரத் திணைக்களம் அதேவேளை அதனை போலீஸ் திணைக்களத்திடம் கையளிக்கப்படும் என்றும் இது தொடர்பாக எந்தவிதமான முறைப்பாடுகளும் கிடைக்கப் பெறவில்லை இதுதொடர்பாக நான் தற்போது கருத்துக்கள் எதனையும் கூற முடியாது இந்த நோய்த்தொற்று தொடர்பில் சரியான முறையில் கண்டறிந்து பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டிய அதிகாரிகள் இந்த விடயத்தில் பொறுப்பற்ற விதத்தில் நடந்திருந்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Recommended For You

About the Author: Editor Elukainews