ஹர்த்தால் நாளில் நான்கு பேர் 2500 ரூபாவிற்காக பாராளுமன்றம் வந்தார்கள் – அங்கயன் எம்.பி சாடல்.

வடக்கு கிழக்கு ஹர்த்தாலை அறிவித்த தமிழ் தலைவர்கள் நான்கு பேர் ஹர்தாலுக்கு செல்லாமல் 2ஆயிரத்து 500 ரூபாவுக்காக பாராளுமன்றம் வந்தார்கள் என சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவர் அங்கயன் இராமநாதன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் போராட்டங்களை வரவேற்கிறேன் ஆனால் தற்போதைய நாட்டின் பொருளாதார பிரச்சினையில் தமிழ் கட்சிகளின் மக்கள் பயப்படாத  போராட்டங்கள் பயன் தராது.
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த தமிழ் கட்சிகளைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அன்று தினம் 2500 ரூபா கொடுப்பனவுக்காக பாராளுமன்றம் வந்ததை அவதானித்தேன்.
நான் அவர்களில் பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை யார் என அறிய வேண்டும் ஆனால் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் அவர்களின் பெயர்களை அறிந்து கொள்ள முடியும்.
இதை ஏன் நான் கூறுகிறேன் என்றால் மக்களின் நாளாந்த வருமானத்தை இழக்க வைக்க கடையடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துவிட்டு தாங்கள் பாராளுமன்றத்தில் சலுகைகளை அனுபவிக்க வந்தார்கள்.
பாராளுமன்றம் செல்ல மக்கள் ஆணை பெற்றவர்கள்  போராட்டம் என்ற போர்வையில் தொழில்களை நிறுத்தி மக்களை வீதிகளில் இறக்கிவிடு தாங்கள் சுக போகங்களை அனுபவிப்பவர்கள் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாக இருக்க முடியாது.
ஆகவே ஜனநாயக நாடு ஒன்றில் மக்கள் சுதந்திரமாக தமது கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடாத்துவது வரவேக்கத்தக்க விடையமாகக் கருதப்படும் நிலையில் மக்கள் மயப்படாத போராட்டங்கள் பயன்தயாது என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews