பூஸ்ஸ சிறைச்சாலையில் மேலும் 28 கைதிகளுக்கு தொற்று உறுதி –

பூஸ்ஸ சிறைச்சாலையில் மேலும் 28 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, தென் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

குறித்த சிறைச்சாலையில் 38 கைதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே, 28 கைதிகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தொற்றாளர்களுடன், தென் மாகாணத்தில் சிறைச்சாலை தொற்றாளர்களின் எண்ணிக்கை 1640 ஆக உயர்வடைந்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews