யாழ் பாடசாலையின் சார்வதேச பழைய மாணவர்களினால் 27 மாணவர்களுக்கு Tab வழங்கிவைப்பு!

யாழ்.கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயத்தின் விடுதியில் தங்கியிருந்து கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவரும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட 27 உயர்தர மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்காக Tab மற்றும் அதற்குரிய மாத கட்டணவசதி என்பன stanly college சர்வதேச பழைய மாணவர் சங்கத்தினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பேரிடர் காரணமாக வீட்டிலிருந்து நிகழ்நிலைத் தொழில்நுட்பமூடாக (Zoom) தற்போது கற்றல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், குறித்த மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் குறித்த உதவித் திட்டம் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளது.


நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக யாழ்ப்பாணம்,வவுனியா,முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டங்களை ; சேர்ந்த குறித்த மாணவர்களின் வீடுகளில் வைத்து பழைய மாணவர் சங்க நிர்வாக உறுப்பினர்களால் கடந்த தலா 23 000 ரூபா பெறுமதியான Tab மற்றும் கட்டணவசதிகளடங்கிய சிம் அட்டை என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கான நிதி அனுசரனை வழங்கிய stanly college சர்வதேச பழைய மாணவர் சங்கத்தினர், அனுமதியளித்த கல்லூரி முதல்வர் திருமதி மகேஸ்வரன் மற்றும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுத்த நலன்விரும்பிகள் அனைவருக்கும் உதவியினை பெற்ற மாணவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் இவ்வாறான நற்பணிகளை மென்மேலும் முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்கள்.

Recommended For You

About the Author: Editor Elukainews