அரசாங்கத்தின் கோர முகத்தை வெளிப்படுத்திய நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகல்….! ரவிகரன் கண்டனம்.

முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜாவின் பதவி விலகலின் ஊடாக இலங்கை அரசாங்கத்தின் கோர முகம் வெளிப்பட்டுள்ளதாக வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜா தான் வகித்து வந்த அனைத்து நீதிபதிப் பொறுப்புக்கள் அனைத்தையும் துறந்து நாட்டை விட்டு வெளியேறிய விடயம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே இதனை தெரிவித்துள்ளார். மேலும், முல்லைத்தீவு நீதிபதிக்கே இவ்வாறான நிலை என்றால் தமிழ் மக்களின் நிலை குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர மற்றும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திலும், நாடாளுமன்றிற்கு வெளியிலும் எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.

அண்மையில் எனக்கான (நீதிபதிக்கான) பொலிஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட அதேவேளை, புலனாய்வாளர்கள் தொடர்ச்சியாக என்னைக் கண்காணித்துவந்தனர்.

சட்டமா அதிபர், என்னை (முல்லைத்தீவு நீதிபதியை) தனது அலுவலகத்தில் (21.09.2023)ஆம் திகதி அன்று சந்திக்க வருமாறு அழைத்து, குருந்தூர்மலை வழக்கின் நீதிமன்றக் கட்டளைகளை மாற்றியமைக்கும்படி அழுத்தம் பிரயோகித்தார்.

இவற்றின் அடிப்படையில் எனக்கு நேர்ந்த உயிர் அச்சுறுத்தல்கள் மற்றும் அழுத்தங்கள் காரணமாக நான் மிகவும் நேசித்த எனது நீதிபதிப் பதவிகள் அனைத்தையும் துறந்துள்ளேன்.” என நீதிபதி சரவணராஜா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews