நள்ளிரவில் வீடு புகுந்த கொள்ளை..! வீட்டிலிருந்தவர்கள் சுதாகரித்ததால் தாக்குதல், ஒரு கொள்ளையனை மடக்கிப் பிடித்து நையப்புடைப்பு.. |

வவுனியா – குட்செட் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்டிருந்தவர்களை வீட்டிலிருந்தவர்கள் மடக்கிய நிலையில் ஒருவர் சிக்கிக்கொள்ள மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கின்றனர்.

அதிகாலை 12.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குட்செட் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் லாவகமாக புகுந்த கொள்ளை கும்பல் வீட்டிலிருந்த பணம் மற்றும் பொருட்களை கொள்ளையடித்துள்ளது.

இதனை அவதானித்து உணர்ந்த வீட்டார் கூச்சலிட்ட நிலையில் கொள்ளையர்கள் வீட்டு உரிமையாளரின் கழுத்தை நொித்து பிடித்துக் கொண்டு தாக்கியுள்ளனர். இதனை அவதானித்த உரிமையாளரின் மகன் கொள்ளையர்களை தாக்கிய நிலையில்

கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். எனினும் ஒருவரை வீட்டார் மடக்கி பிடித்து நையப்புடைத்த பின் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர்.

சம்பவத்தில் 50 ஆயிரம் பெறுமதியான பொருட்களை தப்பிச் சென்ற கொள்ளையர்கள் கொண்டு சென்றுள்ளனர். மேலும் மடக்கி பிடிக்கப்பட்ட கொள்ளையன் வவுனியாவில் இயங்கும் பிரபல ஆடைத் தொழிற்சாலையின் இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேட் அணிந்திருந்ததாக கூறப்படுகின்றது.

Recommended For You

About the Author: Editor Elukainews