பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரதியொன்றை கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

அண்மையில் அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின் பிரதியொன்றை கோரி, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

முன்னதாக கடந்த மார்ச் மாதம் 17ம் திகதி வெளியிடப்பட்ட குறித்த சட்டமூலத்தின், திருத்தத்தை தாம் கோரியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

திருத்தப்பட்ட சட்டமூலத்தின் பிரதி கிடைத்தவுடன் அது தொடர்பான மேலதிக அவதானிப்புகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews