லிபியா வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அலி சப்ரி இரங்கல்

லிபியாவில் ஏற்பட்ட வெள்ளபெருக்கில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது இரங்கலை தெரிவித்துள்ளார்.

தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த சவாலான நேரத்தில் லிபிய மக்களுக்கு உதவியும் ஆதரவும் விரைவாக சென்றடையும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, லிபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 300 ஆக அதிகரித்துள்ளதாக அந்த நாட்டு உள்துறை அமைச்சின் பேச்சாளரை மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் இதுவரையில் 2 ஆயிரத்து 300 மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு முயற்சித்த மூவரும் அடங்குகின்றனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை டேனியல் சூறாவளி தாக்கியதை அடுத்து டெர்னா நகரில் அதிக பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

சுமார் 10 ஆயிரம் பேர் வரை காணாமல் போயுள்ளதாக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் 18 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிப்படைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews