யாழில் இடம்பெற்ற விபத்தில் குடும்பஸ்தர் பலி!

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் நேற்றைய தினம் தனியார் பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் குடும்பஸ்தரொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற தனியார் பேருந்தொன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் மீது மோதி விபத்து சம்பவித்தது.
விபத்தில் கோப்பாயைச் சேர்ந்த எமில் ரவி என்ற 44 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் பேருந்தின் சாரதியை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews