ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

ஐக்கிய நாடுகள் சபையின்  நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று முன்தினம்  திங்கட்கிழமை விஜயம் செய்ததுடன் நேற்று செவ்வாய்க்கிழமை பல்வேறுபட்ட சந்திப்பில்
ஈடுபட்டார்.
அரசாங்க அதிபருடனான சந்திப்பு
ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரனுக்கும்   இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை  தொடர்பான விரிவான  கலந்துரையாடல் நேற்றையதினம் (05) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில்  மாவட்ட மேலதிக  அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர் , பிரதி திட்டமிடல் பணிப்பாளர்  மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட அதிகாரிகளும்  கலந்து கொண்டனர்.-
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம்
ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவை சந்தித்தார்.
யாழ்ப்பாண கோட்டைக்கு விஜயம்
யாழ்ப்பாணப் கோட்டைக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அங்கிருந்து யாழ்ப்பாண நகரத்தின் அழகை பார்வையிட்டார்.

Recommended For You

About the Author: Editor Elukainews