ஆதார வைத்தியசாலையில் நேற்று முதல் தண்ணீர் வசதிஇ்ல்லை….! 7.5 குதிரைவலு நீர்ப்பம்பி கோரும் அத்தியட்சகர்.

பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் நேற்று முதல் தண்ணீர் வசதி இன்றி நோயாளர்கள் மற்றும் மருத்துவமனை அதிகாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து  பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையின்  அத்தியட்சகரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது
தமது மருத்துவ மனைக்கு நீர் வழங்கும் பிரதான நீர்ப்பம்பி  செயலிழந்துள்ளமையினால்  நேற்று முதல் தண்ணீர் வசதி இன்றியுள்ளதாகவும்,  ஆனால் சிறிய ரக தண்ணீர் பம்பி மூலம் பகுதி பகுதியாக நீர் வசதி செய்யப்பட்டுவருவதாகவும் தெரிவித்ததுடன் அதனை சீர் செய்வதற்க்கு புதிய தண்ணீர் பம்பி கொள்வனவு செய்வதற்க்கு பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனையின் அனுமதியை பெற்று மீளமைக்க கால தாமதமாகலாம் என்றும் யாராவது 7.5 குதிரை வலு கொண்ட நீர்ப்பம்பி ஒன்றினை யாராவது கொடையளித்தால் தணணீர் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்படலாம் என்றும் தெரிவித்தார்.
மருத்துவமனையில் மலசல கூட பயன்பாடு உட்பட குடிநீர் வசதிகளை பெற்றுக்கொள்ள முடியாமல் நோயாளர்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
 குறித்த மருத்துவ மனையின் குடிநீர் வசதிக்காக சுத்திகரிக்கப்பட்டு வடிகட்டப்பட்ட குடி வசதியை சந்நிதியான் ஆச்சிரம் செய்து கொடுத்திருந்தது. அதனையே நோயாளர்கள் குடிநீருக்காக நம்பியிருந்தனர் ஆனால் அதில் கூட இன்று குடி நீரை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதுடன் தேசிய  நீர் வழங்கல் சபையின் நீர் விநியோகமும் இன்று தற்போது நிறுத்தப்பட்டுள்ளது
உதனாக் ஒரு லீட்டர் போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர்   ரூ.130ல் இருந்து 150 வரையும் விற்பனையாகின்றது.
இதனையே கொள்வனவு செய்து நோயாளர்கள் பருகிவருவது குறிப்பிட தக்கது விற்பனை ஆகின்ற நிலையில் அதனையே  நோயாளர்கள் கடைகளில் கொள்வனவு செய்து பயன்படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews