திருகோணமலை பாட்டாளிபுரத்திலிருந்து கடலிற்க்கு சென்றர் இதுவரை கரை திரும்பவில்லை….!

திருகோணமலை பாட்டாளிபும் கிராமத்திலிருந்து  கடற்றொழிலுக்குச் சென்றவர் இதுவரை கரை திரும்பாமையால் உறவுகள் கவலை அடைந்துள்ளனர்.

நேற்றுமாலை (11/08/2023)மாலை கடற்றொழிலுக்காக சீனன்வெளியிலிருந்து சென்ற பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவர் இது வரை கரை திரும்பாமையினால் அவரது மனைவி பிள்ளைகள் ஈச்சிலம்பற்று போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன்  இலங்கா பட்டுண கடற்படை முகாமில் இது தொடர்பில் முறையிடப்பட்டுள்ள போதிலும் கடற்படையினரின் ராடரில் எந்தப் பதிவுகளும் இல்லை எனவும் தம்மிடம் தேடுதலுக்கான படகுகளோ வசதிகளோ  இல்லை எனக் கைவிரித்துள்ளனர்.
இதனால்  இன்னமும் தேடுதல் தேடுதல் பணிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.
எனவே இவ்விடயத்தில் கடற்றொழில் அமைச்சர் தலையிட்டு குறித்த மீனவரை கண்டு பிடிக்க உதவ வேண்டும் என பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews