காட்டு காளான் சாப்பிட்ட மூவர் பலி!

அவுஸ்திரேலியாவின் தெற்கு கிப்ஸ்லாந்தில் காட்டு காளானை சாப்பிட்டதால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

66 மற்றும் 70 வயதுடைய இரண்டு சகோதரிகள் ஒகஸ்ட் 4 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதுடன் 70 வயதான ஒருவர், ஒகஸ்ட் 5 ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும் 68 வயதான ஒருவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக அவுஸ்திரேலிய ஊடங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews