யாழ்ப்பாணம் – அனலைதீவில் 13 வயது மாணவிக்கு ஆசிரியரால் பாலியல் தொந்தரவு!

கடந்த ஜூலை 31ஆம் திகதி அனலைதீவு பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 13 வயது மாணவி ஒருவருக்கு, அப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரால் பாலியல் தொந்தரவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த மாணவியால் பாடசாலை நிர்வாகத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டது. ஆனால் இதனை அந்த பாடசாலையின் நிர்வாகத்தினர் வெளியே தெரியாமல் மூடி மறைப்பதற்கு திட்டமிட்டனர்.
இந்நிலையில் இது குறித்து ஐக்கிய மக்கள் சக்தியின் ஊர்காவற்துறை மற்றும் வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதி அமைப்பாளர் சதாசிவம் அவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. அதனடிப்படையில் திரு.சதாசிவம் அவர்களால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கமைவாக ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் 04.08.23 அந்த ஆசிரியரை ஊர்காவற்துறை பொலிஸார் கைது செய்து, நேற்று முன்தினம் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.
இந்நிலையில் அவரை பிணையில் செல்வதற்கு நீதிவான் அனுமதி அளித்தார்.

Recommended For You

About the Author: Editor Elukainews