வடக்கு விவசாயிகளுக்கு நன்கொடை திட்டம்: உதவிக்கரம் நீட்டிய ஜப்பான்

ஜப்பானிய உதவியின் கீழ் 8,500 மெற்றிக் தொன் யூரியா உரக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவு மற்றும் விவசாயத் திட்டத்தின் கீழ், ஜப்பானிய அரசாங்கம் அனுராதபுரம் மாவட்டம் மற்றும் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு இந்த உரத்தொகையை நன்கொடையாக வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல் நேற்று (05.08.2023) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விவசாய அமைச்சு தகவல்

கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலில் இருந்து உரம் இறக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், உர இருப்பு நாளை விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த 18,000 மெற்றிக் தொன் யூரியா உரத்தை ஏற்றிச் சென்ற கப்பல் தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள விவசாய நிலையங்களுக்கு உர விநியோகத்தை மேற்கொண்டு வருவதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews