யாழ்.மாவட்டத்தில் தொடரும் அபாயம்! மேலும் 93 பேருக்கு தொற்று, 2 கொவிட் மரணங்களும் பதிவு.. |

யாழ்.மாவட்டத்தில் மேலும் 93 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக மாவட்டத்தின் கொரோனா அனர்த்த நிலைமை தொடர்பான நாளாந்த நிலவர அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

இதன்படி பீ.சி.ஆர் பரிசோதனையில் 22 தொற்றாளர்களும், அன்டிஜன் பரிசோதனைகளில் 71 தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன் மாவட்டத்தில் 2 கொரோனா மரணங்களும் பதிவாகியுள்ளது.

இதேபோல் மாவட்டத்தில் இதுவரை தொற்றுக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 15723 ஆக உயர்ந்துள்ளதுடன் இதுவரை 366 கொவிட் மரணங்களும் பதிவாகியுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews