சந்தை வியாபாரி மீது மூர்க்கத்தனமான தாக்குதல், படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதி….!

யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பொதுச்சந்தையில் மரக்கறிவகைகள்  வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரி ஒருவர் தனது வியாபார நிறைவடைந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்த வேளை அவரது முச்சக்கர வண்டியை மறித்த  இனம் தெரியாத முக கவசம் அணிந்த இருவர் அவர் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அத்துடன் கண்ணாடி போர்த்தலை உடைத்து அவரின் வயிற்றுப் பகுதியில் குத்த முனைந்த போது அவர் தடுத்தவேளே அவரது இரண்டு கைகளிலும் காயமடைந்த  நிலையில் அவர் அவய குரல் எழுப்பிபோது  அயலவர்கள்   ஓடிச்சென்று அவரை மீட்டு  பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
புலோலி சிங்கநகரை சேர்ந்த ஜெகன் என்பவரை இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
தாக்குதல்  நடத்திய முகமூடி அணிந்த உந்துருளியில் வந்த இருவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
 குறித்த சம்பவத்தொடரில் பருத்தித்துறை போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை குறித்த மரக்கறி வியாபாரி மீது நேற்று இரவு நடந்த தாக்குதலுடன் மூன்றாவது தடவையாக இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews