அல்வாய் வேவிலந்தை   முத்துமாரி அம்மன் ஆலய  வருடாந்த  உற்சவத்தின்  தேர் உற்சவம்…!(VIDEO)

யாழ்ப்பாணம் வடமராட்சி அல்வாய் வேவிலந்தை   முத்துமாரி அம்மன் ஆலய  வருடாந்த உற்சவத்தின்  தேர் உற்சவம் கடந்த 31.07.2023 அன்றைய தினம் மிக மிக சிறப்பாக இடம்பெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடை  சூழ  விநாயகப் பெருமான் முன்னே செல்ல   முருகப்பெருமான் அடுத்துவர  பின்னால்  அல்வாய்  வேவிலந்தை முத்துமாரி அம்மன் பெரிய சித்திர தேரிலே வலம் வந்தார்.

மங்கையர்கள்,  ஆடவர்கள், சிறுவர்கள் என  பலரும் வடம்பிடிக்க  முத்தேரும்  வீதியுலா வந்தது.
இதேவேளை  அடியார்கள்  தூக்குக்காவடி,  தீச்சட்டி,  கரகாட்டம்  அங்க பிறதட்டை,  பால் காவடி போன்ற நேர்த்திகளையும்  நிறைவு செய்திருந்தனர்.
அன்றைய தேர்த்திருவிழாவிலே வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலொரிந்தும்  வடமர ஆட்சியின்  பல்வேறு அடியார்கள்  கலந்து கொண்டு இருந்தனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews