காணி சுவீகரிப்புக்கு எதிராக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்….!

முல்லைத்தீவு – அக்கரைவெளி  காணி சுவீகரிப்புக்கு எதிராக நேற்று மாலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதான நுழைவாயிலுக்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் மகாவலி அபிவிருத்தித் அதிகார சபையே நிலங்களை அபகரிக்காதே, எமது நிலம் எமக்கு வேண்டும் எனப்  பல்வேறு கோஷங்களை மாணவர்கள் எழுப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Recommended For You

About the Author: Editor Elukainews