சிறைகளில் உயிர்நீத்த 54 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவேந்தல்…!

யாழ்ப்பாண மாவட்ட குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் எற்பாட்டில், சிறைகளில் சாவினை தழுவிய குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய 54  தமிழ் அரசியல் கைதிகளின்  நினைவேந்தல் தினம்  நேற்று யாழ்ப்பாணம்-  குருநகர் புதுமை மாதா தேவாலயத்திற்கு அருகாமையில் உள்ள வாஸ்து தலத்தில், குறித்த அமைப்பின்  ஒருங்கிணைப்பாளர் மு.கோமகன் தலைமையில் நடை பெற்றது.
இவ் நினைவேந்தலுக்கு மத ஆசி உரைகளை வழங்கு வதற்காக யாழ்ப்பாணம் – தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன்,
யாழ்ப்பாண மாவட்ட பங்கு குருமுதல்வர் ப.ஜெயபரட்ணம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் சிறைகளில் சாவினை தழுவிய குட்டிமணி, ஜெகன், தங்கத்துரை ஆகிய 54  தமிழ் அரசியல் கைதிகளின் உருவப்படத்திற்கான பிரதான சுடரை யாழ்ப்பாணம் தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் எற்றினார். பின் மலர்மாலையினை யாழ்ப்பாண மாவட்ட பங்கு குருமுதல்வர் ப.ஜெயபரட்ணம் அணிவித்தார்.
இதனை தொடர்ந்து நினைவேந்தல் மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன் நினைவேந்தல் மெழுகுவர்த்தியும் ஏற்றப்பட்டது. இதன்போது, காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள், அரசியல் கைதிகளாக இருந்து விடுதலை செய்யப்பட்டவர்கள், சிவில் சமூகசெயற்பாட்டாளர்கள், குடும்ப உறவினர்கள் என பலரும் கலந்துகொண்டு நினைவேந்தலினை செலுத்தினர்.

Recommended For You

About the Author: Editor Elukainews