வாழைச்சேனை பிரதேச சபையால் கொரோணா விழிப்புணர்வு நடவடிக்கை….!

நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் மரணங்கள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்களுக்கு விழிப்பூட்டும் வகையில் வாழைச்சேனை பிரதேச சபையினரால் விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுவருகிறது.

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.ஸோபா ஜெயரஞ்சித் தலைமையில் நடைபெற்ற விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கும் நிகழ்வில் சபை செயலாளர் எஸ்.நவநீதன், சபை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

இதன்போது பிரதேச சபைக்கு வருகை தந்தவர்கள் மற்றும் வீதியினால் பயணம் செய்த நபர்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் கலந்து கொண்டவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

கொரோனா நோயில் இருந்து எம்மைப் பாதுகாப்போம் என்ற துண்டுப் பிரசுரத்தில் கொரோனா பாதுகாப்பு சுகாதார வழிமுறைகள் மற்றும் கொரோனா தடுப்பூசி ஏற்றுவதை கட்டாயமாக்கிக் கொள்வோம் என்று பிரசுரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews