குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் நூற்றாண்டு விழா…!

குடத்தனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் நூற்றாண்டு விழா  பாடசாலை அதிபர் எஸ். ஜெயச்சந்திரன் தலைமையில் நேற்று 27/07/2023 இடம்பெற்றது.
 இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் பி. எஸ். எம் சார்ள்ஸ் , சிறப்பு விருந்தினர்களான பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், முல்லைதீவு மேலதிக மாவட்ட செயலாளர் கே. கனகேஸ்வரன், வடக்கு மாகாண  கல்வி பணிப்பாளர் யோன் குயின்ரஸ், வடமராட்சி கல்வி பணிப்பாளர் கே. சத்தியபாலன், மருதங்கேணி பிரதேச செயலர் கே.பிரபாகரமூர்த்தி ஆகியோரும் கௌரவ விருந்தினர்களாக மருதங்கேணி கோட்டக்கல்வி பணிப்பாளர் எஸ்.ஸ்ரீராமச்சந்திரன், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ச.சுகிர்தன்,  பாடசாலையின் முன்னாள் அதிபர் கே. குகநாதன், பாடசாலை ஸ்தாபகரில் உறவினர் திருமதி வாசுகி இராஜலிங்கம் மற்றும் மதத் தலைவர்கள் உள்ளிட்ட விருந்தினர்கள் மாலைகள் அணிவிக்கப்பட்டு  பான்ட் வாத்திய அணிவகுப்புடன் பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர். அதனை தொடர்ந்து மங்கள விளக்கு ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.இறைவணக்கம், ஆசியுரை, வரவேற்புரை, வரவேற்பு நடனம், கலைநிகழ்வுகள் இடம்பெற்று விருந்தினர்கள் அரை  என்பன இடம் பெற்றன.

Recommended For You

About the Author: Editor Elukainews