வவுனியாவில் கடவுச்சீட்டு மாபியாக்களால் மோசடி

வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிராந்திய காரியாலயத்தின் முன்பாக பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

குறிப்பாக யாழ், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, ஹொரவப்பொத்தானை பகுதிகளை சேர்ந்த பெரும்பாலான மக்கள் கடவுச்சீட்டுக்களை பெறுவதற்காக வவுனியா குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய காரியாலயத்திற்கு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த காரியாலயத்திற்கு முன் முதியவர்கள் முதல் இளம் பெண்கள் வரை பல நாட்களாக தமக்கான கடவுச்சீட்டினை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறு பலநாட்களாக காத்திருந்தும் கடவுச்சீட்டினை பெறமுடியாத அவல நிலையே காணப்படுகிறது. கடவுச்சீட்டு மாபியாக்களினால் பணம் அறவிடப்படுகின்றது.

இதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முன்னெடுத்த போதும் இதற்கான சரியான தீர்வு கிடைக்கப்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews