கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரம் – காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்துக்கு வலுச் சேருங்கள்

வரும் வெள்ளியன்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன் இடம்பெறவுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்தில் அனைத்து தமிழ் உறவுகளும் திரண்டு பங்கேற்குமாறு வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான துரைராசா ரவிகரன் வேண்டுகோள்   விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளை தங்களிடமே தந்துதவுங்கள் என்கிற கோரிக்கையோடு 2500 நாட்களுக்கு மேலாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராடி வருகிறார்கள்.

தங்களுடைய  உறவுகள் தான்  கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் வெளிப்படுகின்றார்களோ என்கிற ஐயப்பாட்டோடு இருக்கும் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த காணாமல் க்கப்பட்ட உறவுகள்   ஒன்றுகூடி கலந்தாலோசித்து நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை 28.07.2023 காலை 9  மணிக்கு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு முன்னால்  ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டி, இலங்கை அரசை பொறுப்புக் கூற வைக்க வேண்டி  இடம்பெறவுள்ள உறவுகளின் போராட்டத்தில்  அனைத்து தமிழ்மக்களும் ஒன்று திரண்டு   பங்கேற்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Recommended For You

About the Author: Editor Elukainews