இலங்கையில் பாரிய நில அதிர்வு ஏற்படக்கூடிய அபாயம்? –

இலங்கை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பாரிய நில அதிர்வு ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் அதிர்வு நிலைகளை கண்காணிப்பதற்காக மேல் மாகாணத்தில் ஐந்தாவது நில அதிர்வு மத்திய நிலையத்தை நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இது குறித்த ஆரம்ப நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

காலங்களில் நில அதிர்வுகள் ஏற்படக் கூடும் என பேராதனை பல்கலைக்கழகத்தின் புவியியல் பிரிவு பேராசிரியர் அதுல சேனாரட்ன அண்மையில் எதிர்வு கூறியிருந்தார்.

இந்நிலையில், நில அதிர்வு குறித்து ஆராயும் நோக்கில் விஞ்ஞானிகள் மற்றும் பேராசிரியர்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக புவிச்சரிதவியல், அளவை மற்றும் சுரங்கப் பணியகத் தலைவர் அனுர வல்பொல நியமிக்கப்பட்டுள்ளார்.

நில அதிர்வு ஏற்படுதனை தடுக்கவோ அதனை முன்கூட்டியே அறிந்துகொள்ள தொழில்நுட்ப வசதிகள் கிடையாது என தெரிவிக்கப்படுகின்றது.

அண்மைக் காலமாக இலங்கையின் சில பகுதிகளிலும், இலங்கையை அண்டிய கடல் பிரதேசத்திலும் நில அதிர்வுகள் சிறியளவில் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor Elukainews