வர்ணம் பூசும் பணிகளை நிறுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பணிப்பு..! |

யாழ்.மாநகரசபைக்குட்பட்ட பிள்ளையார் குளத்தின் சுற்றுவட்டத்திற்கு தீட்டப்பட்ட வர்ணம் தொடர்பான சர்ச்சைகளை தொடர்ந்து வர்ணம் தீட்டும் பணிகளை நிறுத்துமாறு யாழ்.மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் பணித்துள்ளார்.

உலக வங்கியின் நிதி அனுசரணையுடன் புனரமைக்கப்பட்ட யாழ்.பிள்ளையார் குளம் அண்மையில் அமைச்சர் நாமல் ராஜபக்ச வருகை தந்து பார்வையிட்டுச் சென்றார். அதன் பின்னர் குளத்தை சூழல் உள்ள கொங்கிறீட் தூண்களுக்கு

பௌத்த கொடியை ஒத்த நிறங்கள் தீட்டப்பட்டமையால் குறித்த சர்ச்சை எழுந்தது. இதனைத் தொடர்ந்து முதல்வர் குறித்த பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு பணிப்புரை வழங்கியிருப்பதாக தொிவருகின்றது

Recommended For You

About the Author: Editor Elukainews