பட்டதாரிகளின் பயிற்சி காலம் குறித்து அமைச்சர் டளஸ் கருத்து!

அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பயிற்சி காலத்தை மேலும் 6 மாதத்திற்கு நீடிப்பதற்கான பத்திரம் அமைச்சரவைக்கு முன்வைக்கப்பட்டிருந்தது.
53 ஆயிரம் பயிற்சி பட்டதாரிகளில் 18 ஆயிரம் பேருக்கு நியமனம் வழங்குவதற்கு எதிர்பார்த்திருந்த போதிலும் அந்த பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
இதன்காரணமாக அந்த பணிகளை விரைவுப்படுத்தி, எஞ்சியவர்களையும் அரச சேவையில் உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உரிய தரப்பினரை அறிவுறுத்துமாறு ஜனாதிபதி விடயதான அமைச்சர்களை பணித்ததாக அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews