தமிழர்களின் நலன்களுக்கு முன்னுரிமை கொடு்க்க வேண்டும்: டக்ளஸ் தேவானந்தா

மிழ் அரசியல் தரப்புக்கள் தமிழ் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்தினால் நன்கொடையாக பெற்றுக் கொண்ட மண்ணெண்ணையை பூநகரி கடற்றொழிலாளர்களுக்கு நேற்று (02.06.2023) வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இங்கு வருகை தந்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடற்றொழிலாளர்களின் நலனுக்காக இந்திய தூதுவரை சந்திப்பதற்கான தமது நிலைப்பாட்டினை மாற்றிக் கொண்டிருப்பது அவர்களின் சயநல அரசியலை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கடற்றொழிலாளர்களின் சட்ட விரோத தொழில் முறைகளையும் அத்துமீறல்களையும் கட்டுப்படுத்துவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இந்தியத் தூதுவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக, கடந்த (30.05.2023) ஆம் திகதி யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மறுதினம் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தமது நிலைப்பாட்டினை மாற்றியிருந்தமை தொடர்பாகவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews