கன்னங்குடா பாலம் இடிந்து விழும் நிலை…! பாலத்தை புனரமைத்து தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்…!

மட்டக்களப்பில் அபிவிருத்தி என்ற போர் கொடியை தூக்கியிருக்கும் இரண்டு அமைச்சர்களும் ஏமாற்றி விட்டாதாகவும் இடிந்து விழும் நிலையிலுள்ள வவுணதீவு  பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள கன்னங்குடா பாலத்தையும் அந்த பகுதி வீதியையும் புனரமைத்து தருமாறு கோரி பிரதேச மக்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அந்த பாலத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையடுத்து  அந்த பாலத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள்  இன்று காலை 10 மணிக்கு சுட்டெரிக்கும் வெய்யிலில் ஒன்றிணைந்தனர்.

இதனையடுத்து வாக்குகளை பெற்று மக்களை ஏமாற்றாதே, கன்னங்குடா மக்கள் மக்கள் இல்லையா?, தேர்தல் காலத்தில் மக்களிடம் வாக்குறுதி பின்னர் மக்களும் இல்லை வாக்குறுதி கொடுத்தவர்களும் இல்லை,

கடந்த 1978 ம் ஆண்டு போடப்பட்ட இந்த பாலம் தற்போது இடிந்துவிழும் நிலையில் உள்ளது  இதன் ஊடாக மக்கள் நாளாந்தம் அச்சத்தின் மத்தியில் பிரயாணிப்பதாதாகவும் இந்த பாலத்தின் ஊடாக கன்னங்குடா, மண்டபத்தடி, கரையாக்கம்தீவு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருவதாகவும்.

இந்த பாலத்தின் இருந்து கறிஞ்சாமுனை வரையிலான 900 ஆயிரம் மீற்றர் கொண்ட வீதி ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பிரயாணித்து வருகின்றனர் இந்த வீதி குண்டும் குழியுமாக இருப்பதால் பல்வேறு அசௌகரியங்கள் மத்தியில் பிரயாணித்து வருவதுடன் வீதியின் குழியில் வீழ்ந்து தினமும் காயமடைந்து வருகின்றனர்.

இதேவேளை குறித்த பாலமும் உடைந்து வீழ்ந்து விடும் அபாயகரமான நிலையிலுள்ளது இது தொடர்பாக தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகள் வாக்கு கேட்டுவரும் போது வாக்குறிதிகளை வழங்கிவிட்டு வாக்குகளை பெற்ற பின்னர் இங்கு வருவதில்லை அதேவேளை 2020 அபிவிருத்தி குழு இணைத்தவைராக இருந்த இராஜாங்க அமைச்சர்  வியாழேந்திரனிடம் சென்றேர் இந்த உடனடியாக புனரமைப்பாக தெரிவித்தார் பின்னர் அவர் பதவி போனதும் அதன் பின்னர் வந்த தற்கோதைய அபிவிருத்தி குழு தலைவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன் சென்ற போது மிகவிரைவில் இதனை புனரமைத்து தருவாக தெரிவித்தார்.

ஆனால் கடந்த 2020 எங்கள் மக்களிடம் போலி வாக்குறிதிகளை வழங்கி  வாக்குகளை அபகித்தவர்கள் அபிவிருத்தியையம் செய்யவில்லை எங்கள் அடிப்படை  உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதுடன் சுபபோக வாழ்க்கை வாழுகின்றனர்.

900 ஆயிரம் மீற்றர் வீதியை ஒரு அமைச்சர் செய்ய முடியாது என்றால்  எங்களுக்கு அவமானம் மட்டக்களப்பில் இப்படி ஒரு அமைச்சர் இருந்து இந்த சிறியதை கூட செய்யமுடியாதவர்கள் எதிர்காலத்தில் எப்படி எங்கள் வாக்குகளை கேட்கப்போகின்றீர்கள் என எங்களுக்கு அவமானமாக உள்ளது.

எனவே உடனடியாக இந்த பாலத்தையும் வீதியையும் புனரமைத்து தருமாறு அரசாங்கத்திடம் கோரி; சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் சுமார் ஒருமணித்தியாலம் ஈடுபட்டட பின்னர் அங்கிருந்து விலகி சென்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews