இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய இணைப்பாளர் ரி.கனகராஜ் அவர்களின் அறிவிப்பு

பொதுமக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை கையாளுதல் தொடர்பில் அரசாங்கத்திற்கு மற்றும் சட்டத்தை அமுலாக்கும் அதிகாரிகளுக்கு சிபாரிசு செய்யப்படும் பரிந்துரைகள் தொடர்பான கலந்துரையாடல்
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ( HRCSL ) யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம், அரச மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு சிவில் போராட்டங்களைக் கையாள்வதற்கான பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் பற்றிய கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
12 மே 2023 அன்று, பொது மக்களின் எதிர்ப்பு போராட்டங்களைக் கையாள்வதில் அரச மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ( HRCSL ) பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களை கொழும்பில் வெளியிட்டது.
சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த வழிகாட்டுதல்கள் HRCSL இணையத்தில் உள்ளன.  https://www.hrcsl.lk/hrcsl-issues recommended-guidelines-on-dealing-with-civilian-protests
இந்த கலந்துரையாடலினை நடத்துவதன் முக்கிய நோக்கம் , பிராந்திய மட்டத்தில் இவ்வழிகாட்டுதல்களை அறியப்படுத்துவதும் மற்றும் பங்கேற்பாளர்களிடமிருந்து கருத்துக்களை பெற்று இவ்வழிகாட்டுதலை மெருகேற்றுவதுமாகும்.
 இக்கலந்துரையாடலானது 2023 ஆம் ஆண்டு மே மாதம் 29 ஆம் திகதி ( திங்கட்கிழமை ) பிற்பகல் 2.00 மணிக்கு யாழ்ப்பாண பிரதேச செயலகத்தில் ( Jaffna DS Office ) நடைபெறும்.

Recommended For You

About the Author: Editor Elukainews