தமிழ் தாயத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்பு தெரிவித்தவர்களை கைது செய்த பொலிசாரின் அராஜகம் வன்மையாக கண்டம் – தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ்!!

தமிழ் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரை அகற்ற கோரி போரட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிசார் கண்மூடித்தனமாக மிருகத்தனமான தாக்கி 9 பேரை கைது செய்த அராஜகத்தை வன்மையாக கண்டிப்பதுடன் வடகிழக்கில் விகாரை அமைப்பு காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலுள்ள கட்சி காரியாலயத்தல் நேற்று செவ்வாய்க்கிழமை(23) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்தார்.

தையிலிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரையை திறக்கப்படவுள்ள நிலையில் அதனை அகற்றக் கோரி கட்சி பொதுசெயலாளரும் பா.உறுப்பினருமாhன செல்வராசா கஜேந்திரன் தலைமையில் கட்சி உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையானர்கள் பொதுமக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது இலங்கை அரசின் பொலிசார் மிக மோசமாக அவர்களை தாக்கியதுடன் சட்டத்தரணி சுகாஷ;, திலீபன், தீசன், ராஜீப், சுதாகரன், கோபி, சற்குணதேவி, தமிழ்மதி, ராஜீ கiலைவாணி உட்பட 9 பேரை பலாலி பொலிசார் கைது செய்துள்ளனர்.

உண்மையிலே இந்த நாட்டிலே ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் தாயத்தில் விகாரைகள் முளைக்க ஆரம்பித்துள்ளது கடந்தவாரம் திருகோணமலையில் தமிழர்களுக்கு சொந்தமான முருகன் ஆலையத்துக்கு சொந்தமான  காணியில் தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை வைக்க ஏற்பாடு செய்தனர். அதற்கு எதிராக மக்களுடன் ஒன்றினைந்து போராடி அதனை தற்காலிகமாக தடுத்து வைத்திருக்கின்றோம்.

அதேபோன்று வடக்கு கிழக்கில் விகாhரை அமைப்பது மற்றம் காணி அமைக்கும் செயற்பாடுகளும் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது எனவே தமிழர் தாயத்தில் காணி அபகரிப்பு விகாரை அமைப்பது போன்றவற்றை  முற்று முழுதாக எதிர்ப்போம்

தமிழ் தாயகம் ஒரு மரவு வழிதாயகம் வடக்கு கிழக்கில் தமிழர்கள் முஸ்லீம் மக்கள் வாழுகின்றனர் அவர்;களுடைய வணக்கஸ் தலங்கள் இடிக்கப்பட்டு அதிலே விகாரையை அமைப்பதாக இருந்தால் இந்த நாட்டின் அரசின் இலக்கு என்ன? என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழ் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருந்தூர் விகாரை, தையிட்டி விகாரை , திருகோணமலை வில்லூன்றி முருகன் ஆலையத்தில் புத்தர் சிலை வைப்பது மன்னார் உயிலங்குளத்தில் விகாரை அமைப்பது  போன்ற நடவடிக்கைக கைவிடப்படவேண்டும.

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் புத்தர் சிலை அமைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் தொல்லியல் இடங்கள் என்ற பேர்வையில் தமிழ் மக்கள் காணிகள் இலக்கு வைக்கப்பட்டு அபகரிக்கப்படும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது எனவே இவைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும்

இலங்கை வங்கரோத்து நிலைக்கு சென்றபோது இந்தியா உட்ப பல நாடுகள்  கண்மூடிக் கொண்டு உதவிகளை செய்திருக்கின்றனர். தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனழிப்பு யுத்தமே இந்த நாடு இந்த கடன் சுமைக்கு போயுள்ளது.

எனவே இந்த நாடு கடன் இல்லாத நாடாக மாற்ற வேண்டுமாக இருந்தால் தமிழ் சிங்கள மக்களுக்கு இடையிலான இன முரன்பாடு நீக்கப்படவேண்டும் தமிழ் மக்களின் தேசம் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டும் அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டால் மட்டும்தான் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழமுடியும் என்பதுடன் தமிழ் மக்களுக்கு ஒரு தேசம் அங்கீகரிக்கப்படும்வரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் தொடரும் என்றார்.

Recommended For You

About the Author: Editor Elukainews