யாழ் பல்கலைக் கழக மருத்துவ பீட பீடாதிபதியாக சுரேந்திரகுமாரன் தெரிவு!

யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதியாக வைத்தியக் கலாநிதி இ.சுரேந்திரகுமாரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவ பீடத்தின் தற்போதைய பீடாதிபதியும், சத்திர சிகிச்சை நிபுணருமான பேராசிரியர் எஸ் ரவிராஜின் பதவிக் காலம் நிறைவு பெற்றதையடுத்து புதிய பீடாதிக்கான தேர்தல்  இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றது. மருத்து பீட, பீடச் சபை உறுப்பினர்களுடையியே இடம்பெற்ற வாக்கெடுப்பில் வைத்தியக் கலாநிதி இ. சுரேந்திரகுமாரன் 22 வாக்குகளைப் பெற்று 4 வாக்குகளால் பீடாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கொவிட் 19 தடுப்புச் செயலணியின் இணைப்பாளராகப் பதவி வகிக்கும் வைத்தியக் கலாநிதி இ. சுரெந்திரகுமாரன், மருத்துவ பீட சமுதாய மருத்துவத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார். இவர் சமுதாய மருத்துவத் துறையின்  தலைவராக 2012 முதல் 2019 வரை பதவி வகித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews